இந்தியாவில் சற்றே அதிகரித்த அன்றாட கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 25,467 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு சற்றே ஆக சரிந்துள்ளது. நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,467 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 25,072 என்றளவிலேயே இருந்தது.
முன்னதாக, இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் நேற்று பிரதமர் அலுவலகத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று மேலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 25,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பு 3,24,74,773 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவில் இருந்து 3,17,20,112 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தி்ல் 39,486 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,19,551 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,35,110 என்றளவில் உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 58,89,97,805 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,85,298 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
