

தேசிய பணமாக்குதல் (National Monetisation) திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் கோடி திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியைத் திரட்டுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
குறுகிய கால அடிப்படையிலான கட்டமைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை தேசிய நிதி ஆயோக் வகுத்துள்ளது. இதன்படி கட்டமைப்பு சொத்துகள் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் மற்றும் பவர் கிரிட் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
இத்திட்டப் பணிகளில் தனியாரை ஈடுபடுத்துவதன் மூலம்இதை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்
ளது. அரசு திட்டப் பணிகளை தனியார் துறையினர் மேற்கொண்டு அதை செயல்படுத்துவதோடு அதை நிர்வகிக்கவும் செய்வர். இதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பலன் கிடைக்க வழியேற்படும் என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப்
காந்த் தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலித்து, சாலைகளை நிர்வகிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய நிதி அமைச்சர்தனது பட்ஜெட் உரையின்போது தேசிய பணமாக்குதல் திட்டத்தின் கீழ் கட்டமைப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும் என்றும் இது புதிய கட்டமைப்பு திட்டப் பணிகளில் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுமுதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்கும் என்று நம்புவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.