Published : 23 Aug 2021 03:12 AM
Last Updated : 23 Aug 2021 03:12 AM

கர்தார்பூர் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் செல்லலாம்: பாகிஸ்தான் அரசு அனுமதி

அடுத்த மாதம் முதல் கர்தார்பூர் குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் கரோனா பரவல் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீக்கிய மத ஸ்தாபகர், பாபா குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் குருத்வாரா சாஹிப், பாகிஸ்தானில், சர்வதேச எல்லையை ஒட்டி, ராவி நதிக் கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு, சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டம், தேரா பாபா நானக் நகரிலிருந்து, சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதையை இந்தியா அமைத்தது. அதேபோல், பாகிஸ்தான் எல்லையிலிருந்து, கர்தார்பூர் வரையிலான பாதையை, பாகிஸ்தான் அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து 2019-ல் கர்தார்பூர் சாஹிப்பில் இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் சென்று வழிபடுவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்தது.

ஆனால் 2020-ம் ஆண்டில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் கர்தார்பூர் சாஹிப்பை அடுத்த மாதம் முதல் பார்வையிடுவதற்கு பாகிஸ்தான் அரசு நேற்று அனுமதி வழங்கியது.

பாபா குருநானக் தேவின் நினைவு நாள் வரும் செப்டம்பர் 22-ம் தேதி கடைப்பிடிக்கப்பட வுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த அனுமதியை பாகிஸ்தான் தேசிய உத்தரவு மற்றும் செயல் பாட்டு மையம் (என்சிஓசி) வழங்கி உள்ளது. மேலும் சாஹிப்புக்கு வருவோர் கண்டிப்பாக கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய வர்கள் மட்டுமே பாகிஸ்தானுக்குள் வர முடியும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் பரிசோதனைமுடிவுகளுடனும் பாகிஸ்தானுக் குள் செல்லலாம் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விமானம் மூலம் வருவோருக்கு ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் (ஆர்ஏடி) எனப்படும் விரைவு கரோனா பரிசோதனை செய்யப்படும். முடிவுகளில் பாசிட்டிவ் எனதெரியவரும் நபர்கள் பாகிஸ் தானுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x