

ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் ஏன் வேண்டும் என்பதை விளக்குவதாக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஆப்னில் தலிபான்கள் ஆதிக்கம் காரணமாக அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்து வரும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் ஏன்வேண்டும் என்பதை விளக்குவதாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் கடினமான கால கட்டத்தில் உள்ளனர். இதற்காகத்தான் குடியுரிமை திருத்த சட்டம் அவசியமாகிறது.
இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
நமது அண்டை நாடுகளானபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் துன்புறுத்தப்பட்டு 2014-ம் ஆண்டுடிசம்பருக்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.