உத்தர பிரதேசத்தில் கல்லீரலை தானம் செய்து தம்பியின் உயிரை காப்பாற்றிய சகோதரிகள்

உத்தர பிரதேசத்தில் கல்லீரலை தானம் செய்து தம்பியின் உயிரை காப்பாற்றிய சகோதரிகள்
Updated on
1 min read

தம்பிக்காக அவரது சகோதரி கள் கல்லீரலை தானம் கொடுத் துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் படாயு பகுதியை சேர்ந்த சிறுவன் அக்சத் துக்கு (14) மஞ்சள் காமாலையால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப் பட்டது. தம்பி மீது அதிக பாசம் வைத்திருக்கும் அவரது மூத்த சகோதரிகள் நேகா (29), பெர்னா (22) ஆகியோர் அவருக்கு கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தனர்.

டெல்லி அருகே குர்காவ்ன் நகரில் உள்ள மெதந்தா மருத் துவமனையில் சிறுவனுக்கு அண்மையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் நீலம் மோகன் கூறியதாவது:

கல்லீரல் பாதிப்பு மட்டுமன்றி, உடல் பருமனாலும் சிறுவன் அக்சத் அவதிப்பட்டு வந்தார். எனவே அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது கடினமாக இருந்தது. அறுவை சிகிச்சை அரங்கில் சிறுவன், அவரது 2 சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு கல்லீரல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மூவரும் தற்போது உடல்நலம் தேறி வருகின்றனர். இதுதான் சகோதரத்துவத்தைப் போற்றும் உண்மையான ரக் ஷா பந்தன் ஆகும்.

இவ்வாறு மருத்துவர் நீலம் மோகன் தெரிவித்தார்.

மெதந்தா மருத்துவமனை தலைவர் நரேஷ் கூறும்போது, "கல்லீரல் பாதிப்பால் அவதிப்படு வோருக்கு உறவினர்கள், நண்பர்கள் பாதி கல்லீரலை தானமாக வழங்கலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிஉயிரை காப்பாற்றலாம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in