

மொத்தம் 75 லட்சம் வாக்காளர் கள் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் 150 மண்டலங் களுக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடத்தப்பட்டது.
தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் தம்பதி, ஆந்திர முதல்வர் குடும்பத்தினர் மற்றும் நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் ஓட் டளித்தனர்.
பெரிய அளவில் அசம்பாவிதங் கள் ஏதுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை வரை 46.62 சதவீதம் ஓட்டுகள் பதிவாயின. இந்த தேர்தலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டிருந்தது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.