

உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் ஆலயம் வரும் மே 11-ம் தேதி மீண்டும் வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது.
விஷ்ணு பகவானின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் இமயமலைப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 10,279 அடி உயரத்தில் அலக்நந்தா நதிக் கரையில் அமைந்துள்ளது.
இமயமலையின் மிதமிஞ்சிய குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இக்கோயில் நடை திறந்திருக்கும். இக்கோயில் நடை கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி மூடப்பட்டது. இந்நிலை யில் இக் கோயில் மே 11-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என பத்ரிநாத் கேதார்நாத் ஆலய கமிட்டியின் முதன்மை செயல் அதிகாரி பி.டி. சிங் நேற்று தெரிவித்தார்.