

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் வீரமரணம் அடைந்தனர்.
குப்வாரா மாவட்டம், சவுக்கிபால் பகுதியில் உள்ள மர்சரி என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை நேற்று முன்தினம் மாலை முற்றுகையிட்டனர். இதையடுத்து மோதல் தொடங்கிய சிறிது நேரத்தில் ஒரு அதிகாரி உட்பட பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக நீடித்த மோதலில் அடுத் தடுத்து 5 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் வீரமரணம் அடைந் தனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டம், பஜ்பத்ரி பகுதியில் உள்ள வனத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை ராணுவத்தினர் நேற்று கண்டறிந் தனர். இங்கிருந்து பெருமளவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் பிற சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.