

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,457 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 151 நாட்களில் இல்லாத அளவு இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 34 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 61 லட்சத்து 340 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் கரோனாவில் இருந்து 3,15,97,982 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 97.54 ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 375 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,33,964 என்றளவில் உள்ளது.
இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 50,45,76,158 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஆகஸ்ட் 20 ஆம் தேதி மட்டும் 17,21,205 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 57 கோடியே 61 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது