

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதாம் நகரைச் சேர்ந்தவர் உபேந்திர கோஸ்வாமி. இவர் சுங்கத் துறை ஏஜென்டாக பணிபுரிகிறார். பூனைகள் மீது பிரியம் வைத்துள்ள இவர் அண்மையில் 200 பூனைகளுக் கான பூங்காவை காந்திதாம் நகரில் திறந்துள்ளார்.
இதுகுறித்து உபேந்திரா கூறியதாவது: இந்தப் பூங்காவில் 200 பூனைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மறைந்த எனது சகோதரியின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம். ஒரு முறை சகோதரியின் பிறந்த நாள் கேக்கை ஒரு பூனை சாப்பிட்டு விட்டது. அது முதல் அந்தப் பூனை எங்கள் வீட்டிலேயே வளர்கிறது. அந்தப் பூனையை எங்களது சகோதரியாகவே பாவித்து வளர்த்து வருகிறோம்.
இந்தப் பூங்காவில் 4 ஏ.சி. அறைகள், 16 காட்டேஜ்கள், 12 படுக்கைகள் உள்ளன. மேலும் பூனைகள் குளிக்க ஷவர் வசதியும் செய்யப் பட்டுள்ளது. மேலும் பூனைகள் பார்ப்பதற்காக விலங்குகள் தொடர்பான படங்கள், செய்திப் படங்களைத் திரையிடும் மினி தியேட்டரும் உள்ளது. பூனை களுக்குத் தேவையான உணவுகளும் இங்கு தரப்படும்.
மேலும் பூனைகள் உடலைப் பரிசோதிக்க அகமதாபாத் ஜிவ்தயா அறக்கட்டளை மருத்துவ மனையிலிருந்து டாக்டர் கள் வருகின்றனர்.
எனது மனைவி பள்ளியில் முதல்வராக பணிபுரிகிறார். பூனைகள் பராமரிப்பில் அவரும் எனக்கு உதவுகிறார். பூனை களுக்காக மாதம்தோறும் ரூ.1.5 லட்சம் செலவு செய்து வருகிறோம். இந்தப் பூங்காவை மக்கள் ஞாயிறுதோறும் காணலாம். இதற்கு குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கிறோம்.
இவ்வாறு உபேந்திரா கூறினார்.