

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர் களின் புனித நூலான பைபிளில் சொல் லப்பட்டுள்ளது ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகம் முழு வதும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்கால மாக அனுசரிக்கிறார்கள். முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக் கப்படும்.
தவக்கால நாட்களில் கிறிஸ் தவர்கள் பெரும்பாலும் மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு களை சாப்பிடமாட்டார்கள். மேலும், வீடுகளில் ஆடம்பர நிகழ்ச்சி களையும், கொண்டாட்டங்களையும் தவிர்த்துவிடுவர். ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வண்ணம் வெள்ளிக்கிழமைதோறும் கத் தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடை பெறும். மேலும், ஆலயங்களில் இருந்து பங்குமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து வேறு ஆலயங்களுக்கு திருயாத்திரை பயணம் செல்வார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப்பது, தர்ம காரியங்கள் செய்வது என நற்செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பெரு விழா மார்ச் மாதம் 27-ம் தேதி கொண் டாடப்படுகிறது. எனவே, அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்கால மாக அனுசரிக்கப்படும். அந்த வகையில், கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையுடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனையும், திருப்பலியும் நடைபெறும். வழிபாட்டின்போது, குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்தோலை களை எரித்து தயாரிக்கப்பட்ட சாம் பலை பாதிரியார் மக்களின் நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின் றாய், மண்ணுக்கே திரும்புவாய், மறவாதே” என்று சொல்லியபடி சிலுவை அடையாளம் இடுவார்.