

விஜயவாடாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகையை குறைத்துக் கொள்ளும்படி, அந்நகர மக்களுக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜயவாடா அருகே ஆந்தி ராவின் புதிய தலை நகரமான அமராவதி உருவாக உள்ளது. இதனால் விஜயவாடாவில் வீடு, அலுவலங்களின் வாடகையும், காலி மனைகளின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு இவ்வாறு கூறியுள்ளார்.