

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட இரு தலித் சிறுமிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
இந்த வழக்கை சிபிஐ விசா ரிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, கொல்லப்பட்ட இரு தலித் சிறுமிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க பதான் மாவட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சென்றார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் சிறுமிகள் கொல்லப்பட்டது தொடர்பான விவரத்தை கேட்ட றிந்த ராகுல், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தன்னாலான உதவிகளை செய்து தருவதாக அவர் உறுதியளித்தார். பின்னர், சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கவிடப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
ராகுலிடம் பேசிய அக்குடும்பத் தினர், “எங்களின் புகாரை ஏற்க போலீஸார் மறுத்துவிட்டனர். நாங்கள் புகார் செய்த நேரத்தில் போலீஸார் நடவடிக்கை எடுத் திருந்தால், இருவரும் உயிருடன் மீட்கப்பட்டிருப் பார்கள்.
இந்த சம்பவம் டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை விட மிகவும் கொடூரமானது” என்றனர்.
அதன் பின்பு செய்தியாளர்களி டம் ராகுல் காந்தி கூறுகையில், “நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்வதன் மூலம் சிறுமிகளின் கவுரவம் திரும்பக் கிடைத்து விடாது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர். அதோடு, உத்தரப் பிரதேச போலீஸார் மீது நம்பிக்கையில்லையென்றும், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அவர்களின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு பெண்ணின் கவுரவத்திற்கு விலை எதையும் நிர்ணயிக்க முடியாது.
இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற செயலில் இந்தியாவில் இனிமேல் யாரும் ஈடுபட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் அந்த நடவடிக்கை அமைய வேண்டும்” என்றார் ராகுல்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்
நிர்மல் காட்ரி, கட்சியின் தலித் பிரிவுத் தலைவர் கே.ராஜு ஆகியோர் ராகுலுடன் சென்றனர்.