கோப்புப்படம்
கோப்புப்படம்

150 நாட்களில் இல்லாத அளவு இந்தியாவில் கரோனா சிகிச்சையில் இருப்போர் குறைந்தனர்

Published on

கடந்த 150 நாட்களில் இல்லாத அளவு இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 36 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 605 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 150 நாட்களில் முதல் முறையாக கரோனா தொற்று இந்த அளவுக்கு முதல் முறையாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 1.12 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரத்து 635 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர் சதவீதம் 97.52 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 524 பேர் கரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 540 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 33 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 50 கோடிேய 26 லட்சத்து 99 ஆயிரத்து 702 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 லட்சத்து 86 ஆயிரத்து271 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 57.22 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in