போர் விமானங்களில் புதிய தொழில்நுட்பம்: ஏவுகணை தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள டிஆர்டிஓ தயாரிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தில் சாஃப் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள ஜெட் விமானங்கள்.படம்: பிடிஐ
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தில் சாஃப் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள ஜெட் விமானங்கள்.படம்: பிடிஐ
Updated on
1 min read

ஏவுகணை தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் சாஃப் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜெட் விமானங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது.

உலகம் முழுவதும் எதிரியின்போர் விமானங்களை துல்லியமாகதாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், எதிரி நாடுகளின் ஏவுகணைகளை திசைதிருப்பும் திறன்கொண்ட ஜெட் விமானங்களை இந்திய விமானப் படைக்காக டிஆர்டிஓ நிறுவனம் தயாரித்திருக்கிறது. சாஃப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விமானங்களால் ஏவுகணைகளை திசைதிருப்ப முடியும்.ஒன்று, ஃப்ளேர் என்ற தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்கள், ஏவுகணையில் இருந்து தப்பிக்க, அதிக அளவிலான நெருப்பை உமிழும். இதன் மூலம், வெப்பத்தை பயன்படுத்தி விமானத்தை துரத்தும் ஏவுகணைகள் திசைதிரும்பிவிடும். ஆனால், வெப்பத்தை தவிர்த்து அலுமினிய உலோகத்தை பயன்படுத்தி விமானங்களை துரத்தும் ஏவுகணைகளிடம் இருந்து இவை தப்பிக்க முடியாது.

ஆதலால், இதனை விட மேம்பட்ட தொழில்நுட்பமாக சாஃப் தொழில்நுட்பம் கருதப்படுகிறது.

சாஃப் தொழில்நுட்ப ஜெட் விமானங்கள் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டதால், விமானப் படையில் இணைக்கப்பட்டு வருவதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in