Published : 19 Feb 2016 14:16 pm

Updated : 19 Feb 2016 14:16 pm

 

Published : 19 Feb 2016 02:16 PM
Last Updated : 19 Feb 2016 02:16 PM

கார் விபத்து வழக்கு: சல்மானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கார் விபத்து வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஒருவர் உயிரிழக்கவும், நான்குபேர் பலத்த காயமடையவும் காரணமாக இருந்தார் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சல்மான் கானை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்தது.

போதிய ஆதாரங்களை அரசு நிரூபிக்கத் தவறியதாகக் கூறி சல்மான் கானை விடுவித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சல்மான் கான்கார் விபத்துஉச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author