

ஆப்கானி்ஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதோடு மட்டும்லலாமல், ஆப்கன் நாட்டைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்குத் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும் என்று பாதுகாப்பான அமைச்சரவைக் குழுவில் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்
ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்துக்கள், சீ்க்கியர்கள் இந்தியா வர விரும்பினால், அவர்களை பாதுகாப்பாக அழைத்துவரவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறபின், அந்நாட்டை முழுமையாக தலிபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
அங்குள்ள இந்தியர்கள், இந்தியத்தூதரகங்கள், அங்கு பணியாற்றுவோர் ஆகியவை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், ஆப்கன் சூழல் குறித்தும் விவாதிக்க பாதுகாப்பான அமைச்சரவைக் குழு நேற்று பிரதமர் மோடி தலைமையில் அவசரமாக நேற்று கூடியது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கவுபா, வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஸ வர்தன் ஸ்ரீங்கலா, ஆப்கனுக்கான இந்தியத் தூதர் ருத்தேந்திர டான்டன் ஆகியோர் பங்கேற்றனர்
அப்போது இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பிறப்பித்த உத்தரவு குறித்து மத்திய அரசின் வட்டாரங்கள் கூறுகையில் “ ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும், அங்குள்ள சீக்கியர்கள், இந்துக்கள் இந்தியா வர விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
இந்திய மக்களை பாதுகாப்பாக அழைத்து வருவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் உதவியை எதிர்பார்த்திருக்கும் ஆப்கன் சகோதர, சகோதரிகளுக்கு தேவையான உதவிகளையும் வழங்கிட வேண்டும்.வரும் நாட்களில் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துவரும் பணியை தொடங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கின்றன.
காபூலில் இருந்து இந்தியத் தூதரகத்தின் பணியாளர்களை அழைத்துக் கொண்டு வந்த இந்திய விமானப்படை விமானம் குஜராத்தின் ஜாம்நகருக்கு நேற்று வந்து சேர்ந்தது. அதில் ஆப்கனுக்கான இந்திதத் தூதர் ருத்தேந்திர டான்டனும் வந்து சேர்ந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரி்க்க பயணத்தில் இருப்பதால், அவர் பங்கேற்கவில்லை.
மேலும், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் , “ஆப்கானிஸ்தான் தற்போதுள்ள அரசியல் நிலவரம், பாதுகாப்பு விவகாரம், தலிபான்கள் நிலைப்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் விவரம் குறித்தும், அங்கு இன்னும் சிக்கியிருப்போர் குறித்தும் விளக்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் இரு விமானங்கள் மூலம் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய 150க்கும் ேமற்பட்ட பணியாளர்கள்,பாதுகாப்பு அதிகாரிகள், ஆகியோர் நேற்று மீட்கப்பட்டு, குஜராத்தின் ஜாம்நகர் அழைத்துவரப்பட்டதையும் தெரிவிவித்தனர்” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.