

கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் கடந்த 2013-ல் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2013, ஜூலை 19-ம்தேதி, எர்ணாகுளம் காவல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி, அவரது 2 அமைச்சர்கள், 2 முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதுகுறித்து பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய ஆட்சியில் மாநில குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்க, பினராயி விஜயன்அரசு கடந்த ஜனவரியில் பரி்ந்துரை செய்தது. இந்த நிலையில் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி.க்கள், கே.சி.வேணுகோபால், ஹைபி ஈடன், அடூர் பிரகாஷ், காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த அப்துல்லா குட்டி ஆகிய 5 பேர்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.-பிடிஐ