

அலிகர் நகரை ஹரிகர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச அரசுக்கு பஞ்சாயத்து சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை யோகி ஆதித்யநாத் அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால், பாஜக ஆளும் இம்மாநிலத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊர்களின் பட்டியலில் அலிகரும் இணையும். ஏற்கெனவே, அலகாபாத் பிரயாக்ராஜ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2019 ஜனவரியில் கும்பமேளா நடப்பதற்கு முன்னதாக இந்தப் பெயர் மாற்றம் நடந்தது.
இந்நிலையில் நேற்று அலிகரில் நடந்த பஞ்சாயத்து வாரியக் கூட்டத்தில் அலிகர் பெயரை ஹரிகர் என மாற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏகமானதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
அதேபோல், தானிபூர் விமாமதளத்தை கல்யாண் சிங் விமாணத்தளம் எனப் பெயர் மாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019ல் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் தேவையான நகரங்கள், முக்கிய இடங்களின் பெயர் மாற்றப்படும் என்று கூறினார். முகல் சராய் பகுதியை பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் நகர் என்று பெயர் மாற்றினோம். அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்று மாற்றினோம். ஃபைஸாபாத்தை அயோத்யா என மாற்றியுள்ளோம். எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் பெயர் மாற்றம் நிகழும் என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது அலிகர் பெயர் ஹரிகர் என மாற்ற பஞ்சாயத்து சார்பில் யோகி அரசிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.