டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலையில் விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியில், பி.வி.சிந்து பாட்மிண்டனில் வென்ற பதக்கங்களை பிரதமர் மோடியிடம் காட்டினார். படம்: பிடிஐ
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலையில் விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியில், பி.வி.சிந்து பாட்மிண்டனில் வென்ற பதக்கங்களை பிரதமர் மோடியிடம் காட்டினார். படம்: பிடிஐ
Updated on
1 min read

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனை களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தனது இல்லத்தில் விருந்தளித்தார்.

டோக்கியோவில் சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருந்தார். பளு தூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவி குமார் தஹியா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், பாட்மிண்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் லோவ்லினா போர்கோஹெய்ன், ஹாக்கியில் ஆடவர் அணி வெண்லகலப் பதக்கமும் கைப்பற்றியிருந் தனர்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தனது இல்லத்தில் விருந்தளித்தார். அப்போது நீரஜ் சோப்ராவுக்கு விருப்பமான ‘சுர்மா’பரிமாறப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக பி.வி.சிந்துவிடம், தாங்கள்ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால்என்னுடன் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தார். விருந்தின்போது இதை பிரதமர் நிறைவேற்றினார்.

விருந்தின்போது இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் தங்களது கையொப்பமிட்ட ஹாக்கி மட்டையை பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கினர். டோக்கியோ ஒலிம் பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பிறகு பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற குழுவினரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in