

1946 செப்டம்பர் 2-ம் தேதியிலிருந்து இதுவரை சுதந்திர இந்தியாவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த 43-வது அமைச்சர் சுரேஷ் பிரபு.
அதிக முறை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை காங்கிரஸின் ஜகஜீவன் ராம் வசம் உள்ளது. 1956 முதல் 1962 வரை 6 முறை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
லால் பகதூர் சாஸ்திரி, சி.கே. ஜாபர் ஷெரீப், லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் தலா 5 முறையும், என். கோபாலசாமி அய்யங்கார், எஸ்.கே. பாட்டீல், நிதிஷ் கமார் ஆகியோர் தலா 4 முறையும் சமர்ப்பித்துள்ளனர்.
ரயில்வே அமைச்சர்கள்: 1) ஆசப் அலி 2) ஜான் மத்தாய் 3) என்.கோபாலசாமி அய்யங்கார் 4) லால் பகதூர் சாஸ்திரி 5) ஜகஜீவன் ராம் 6) சரண் சிங் 7) ஹெச்.சி. தாசப்பா 8) எஸ்.கே பாட்டில் 9) சி.எம். பூனச்சா 10) ராம் சுபாக் சிங் 11) பி.கோவிந்த மேனன் 12) குல்சாரிலால் நந்தா 13) கே.ஹனுமந்தய்யா 14) டி.ஏ. பாய் 15) லலித் நாராயண் மிஸ்ரா 16) கே. திரிபாதி 17) மது தண்டவடே 18) டி.ஏ. பாய் 19) கே.திரிபாதி 20) கேதார் பாண்டே 21) பிரகாஷ் சந்திர சேத்தி 22) ஏ.பி.ஏ. கானி கான் சவுத்ரி 23) பன்ஸி லால் 24) மோஷினா கித்வாய் 25) மாதவ் ராவ் சிந்தியா 26), ஜார்ஜ் பெர்னாண்டஸ் 27) ஜானேஷ்வர் மிஸ்ரா 28) சி.கே. ஜாபர் ஷெரீப் 29) ராம் விலாஸ் பாஸ்வான் 30) நிதிஷ் குமார் 31), ராம் நாயக் 32) மம்தா பானர்ஜி 33) நிதிஷ் குமார் 34) லாலு பிரசாத் யாதவ் 35) மம்தா பானர்ஜி 36) தினேஷ் திரிவேதி 37) முகுல் ராய் 38) சி.பி. ஜோஷி 39) பவன் குமார் பன்சால் 40) சி.பி. ஜோஷி, 41) மல்லி கார்ஜுன கார்கே 42) சதானந்த கவுடா 43) சுரேஷ் பிரபு.