

கர்நாடகாவில் ரசம் ருசி இல்லாததை காரணம் காட்டி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. எனினும் அதே முகூர்த் தத்தில் வேறொரு மணமகனுடன், மணமகளுக்கு திருமணம் நடந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள சுதந்திர பாளையாவை சேர்ந்த திம்மையாவின் மகன் ராஜூ (32). டீ விற்பனையாளரான இவருக்கும் துமக்கூரு மாவட்டத் தைச் சேர்ந்த குனிகல் கிராமத்தை சேர்ந்த பிரகாசத்தின் மகள் சவுமியா வுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. கடந்த சனிக்கிழமை மாலை மணமகளின் வீட்டார் சார்பில் திருமணத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கள் அனைவருக்கும் உணவு பரி மாறப்பட்டது. அப்போது சாம்பார் மற்றும் ரசம் ருசியாக இல்லாததை காரணம் காட்டி மணமகன் வீட்டார் தகராறு செய்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன மணமகள் வீட்டார் அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தனர்.
அதிகாலையில் திருமணம் நடக்கும் சமயத்தில் நலங்கு வைப் பதற்கான சடங்குக்காக மணமகன் வீட்டாரை அழைக்கச் சென்றபோது அவர்கள் அனைவரும் மண்ட பத்தை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
இதனால் குழப்பமடைந்த மணமகளின் பெற்றோர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, ‘ருசியான ரசம் வைக்கத் தெரியாத குடும்பத் தாருடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவிரும்பவில்லை. திரு மணத்தை நிறுத்திவிடுங்கள்’ என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.
அப்போது பெரியவர்கள் மேற் கொண்ட முயற்சியால் திருமணத் துக்கு வந்திருந்த கோவிந்த ராஜ் என்ற இளைஞர் மணமகள் சவுமியாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.
இதையடுத்து இருவருக்கும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது.
இது குறித்து மணமகளின் பெற்றோர் கூறும்போது, ‘‘ரசம் ருசியில்லாததை கூட பொறுத்துக் கொள்ள முடியாத மணமகன் வீட்டாரிடம் இருந்து கடைசி நேரத்தில் எனது மகளை கடவுள் தான் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம்’’ என்றனர்.
அதே சமயம், மலிவான காரணத்துக்காக திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி துமக்கூரு மகளிர் அமைப்பினர் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.