

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியவிளையாட்டு வீரர்கள், தேசத்தின்இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையின ரையும் ஊக்குவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர்ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியவீரர்களை வெகுவாக பாராட்டினார்.
இதுதொடர்பாக அவர் பேசும்போது, “இந்தியாவை பெருமைப்படுத்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் இன்று எங்களுடன் உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பார்ப்பவர்கள், விளையாட்டு வீரர்களைப் பாராட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய விளையாட்டுகளுக் கும், நமது இளம் தலைமுறையின ருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்குநமது மரியாதையை காட்டுவோம்.எங்கள் விளையாட்டு வீரர்கள்தேசத்தின் இதயங்களை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் ஒன்றையும் அவர்கள் செய்துள்ளனர் என்பதில் நாம் பெருமைப்படலாம்” என்றார்.
செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு அனுப்பினார். இதை ஏற்று நேற்று நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும்நான்கு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது. ஈட்டி எறிதலில்நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம் கடந்த 13 ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்றபெருமையை பெற்றிருந்தார்.
நேற்று முன்தினம், இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து வழங்கியிருந்தார். அப்போது விளையாட்டு வீரர்களால் முழு நாடும் பெருமை கொள்வதாக ராம்நாத் கோவிந்த் கூறி யிருந்தார்.