

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் தாரா கரெமனி. இவர் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கீதமான 'ஜன கன மன' என தொடங்கும் பாடலை சந்தூர் இசைக்கருவியில் வாசித்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த வீடியோவைப் பார்த்த பலரும் தாராவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தொடங்குவதற்கு முன்னதாக இந்திய நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என தாரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “இந்தியா முழுவதும் பயணம் செய்து அங்குள்ள மக்களின் அன்பைக் கண்டேன். அனைவரும் கருணை உள்ளம் கொண்டவர்கள். மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். அவர்களது வரவேற்புக்கு ஈடு இணையே இல்லை” என்று கூறியுள்ளார்.