

சுற்றுச்சூழல் மேம்பாடு, காற்று மாசு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெங்களூரு எம்.ஜி. சாலையில் வாகனங்கள் இல்லாத (ஓப்பன் ஸ்ட்ரீட்) நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
ஒரு நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஆடல், பாடல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஓப்பன் ஸ்ட்ரீட். இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே பெங்களூருவில் உள்ள ஹெச்.எஸ்.ஆர். லே அவுட் மற்றும் கமர்சியல் தெருவில் நடத்தப்பட்டது. இதனால் காற்று மாசுபாடு குறைவாக இருந்ததாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பெங்களூருவின் பிரபலமான சாலையான எம்,ஜி.சாலை யில் நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அணில் கும்பளே சதுக்கத்தில் இருந்து பிரிகேட் சாலை சந்திப்பு வரையிலான சுமார் 1 கி.மீ தூரத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெங்களூரு போக்கு வரத்து கழகம், மெட்ரோ ரயில் கார்ப் பரேஷன், மாநகராட்சி ஆகியவற்றின் சார்பாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் மிதி வண்டி போட்டி, கோலப் போட்டி, மாறுவேடப் போட்டிமற்றும் கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.