மூக்கில் உறியும் கரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் நிறுவனத்தின் 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி

படம் உதவி | ட்விட்டர்
படம் உதவி | ட்விட்டர்
Updated on
1 min read

மூக்கின் மூலம் உறிஞ்சக்கூடிய கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கின் மூலம் உறிஞ்சக் கூடிய கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் கிளினி்க்கல் பரிசோதனை முதற்கட்டம் முடிந்துவி்ட்டது.

பிபிவி154 எனும் பெயர் கொண்ட இந்த மருந்து சிம்பன்ஸியின் அடினோவைரஸ் தொடர்புடைய வெக்டார் வகை தடுப்பூசியாகும்.இந்த மருந்தை தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப அனுமதியைப் பெற்றுள்ளது.

பாரத் பயோடெக் தயாரிக்கும் இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது.

முதல்கட்ட கிளினிக்கல் பரிசோதனை 18 வயது முதல் 60 வயதுள்ள பிரிவினருக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் வெளியி்ட்ட அறிவிப்பில், “ மருந்து செலுத்தப்பட்ட ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு சிறப்பாக வேலை செய்கிறது.

இந்த மருந்து பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவல்லது, நன்றாக வேலை செய்யும் என விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியதுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை்ச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி தற்போது மக்களுக்குசெலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in