

ஓட்டுநருடன் கடத்தப்பட்ட தனது காரின் இன்ஜினை ரிமோட் மூலம் நிறுத்தியதால், வேறு வழியின்றி மர்ம நபர்கள் அந்தக் காரை நடு வழியிலேயே நிறுத்திவிட்டு ஓடி விட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பிஹார் மாநிலம் வைஷாலியில் இருந்த இன் னோவா காரை, மர்ம நபர்கள் 3 பேர் நேற்று அதிகாலை 2 மணிக்கு ஓட்டுநருடன் கடத்திச் சென் றனர். அங்கிருந்து கவி நகரை நோக்கி கார் சென்று கொண்டி ருந்தது. இதற்கிடையே தனது கார் கடத்தப்பட்டதை அறிந்த அதன் உரிமையாளர், ஜிபிஎஸ் வசதி கொண்ட அந்தக் காரின் இன் ஜினை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிறுத்தினார்.
இதையடுத்து கார் திடீரென நின்றுவிட்டது. அதனால் அந்தக் காரையும் ஓட்டுநரையும் அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் காணாமல் போன இடத்தி லிருந்து 14 கி.மீ. தொலைவில் கார் மீட்கப்பட்டது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.