புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் இரு பிரிவுகள் இணைந்தன

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் இரு பிரிவுகள் இணைந்தன
Updated on
1 min read

கேரளத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் (ஆர்.எஸ்.பி) 2 பிரிவுகளும் கொல்லத்தில் நடை பெற்ற விழாவில் செவ்வாய்க் கிழமை இணைந்தன.

கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுசாரி கூட்டணியில் இருந்துவந்த ஆர்.எஸ்.பி., சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது அக்கூட்டணியில் இருந்து விலகியது. ஆர்.எஸ்.பி.க்கு கொல்லம் தொகுதி ஒதுக்கப்படாததே இதற்கு காரணம். இடதுசாரி கூட்டணியில் இருந்து விலகிய ஆர்.எஸ்.பி., எதிரணியான காங்கிரஸ் கூட்டணி யில் இணைந்து கொல்லத்தில் போட்டியிட்டது.

கொல்லத்தில் ஆர்.எஸ்.பி. வேட்பாளர் பிரேமச்சந்திரன், மார்க்சிஸ்ட் வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எம்.ஏ.பேபி யை தோற்கடித்தார். ஆர்.எ.ஸ்.பி.யின் மற்றொரு பிரிவான ஆர்.எஸ்.பி. (பி) ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணி யில் இருந்து வருகிறது. இப்பிரிவின் தலைவர் ஷிபு பேபி ஜான், காங்கிரஸ் கூட்டணி அரசில் தொழிலாளர் துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் ஆர்.எஸ்.பி. காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து விட்டதால், ஆர்.எஸ்.பி. (பி) தாய் கட்சியுடன் இணைய முடிவு செய்ததது. இதையடுத்து கொல்லத்தில் இணைப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ஜே.சந்திரசூடன், பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர், நாட்டில் இடதுசாரிகளின் ஒற்றுமையை பலப்படுத்த இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர்.

பாஜக கூட்டணிக்கு மாற்றாக, இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதசார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டப் போவதாக அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in