75-வது சுதந்திர தினம்; உலகெங்கும் கொண்டாட வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு

கனடா நயாகரா நீர்வீழ்ச்சி- கோப்புப் படம்
கனடா நயாகரா நீர்வீழ்ச்சி- கோப்புப் படம்
Updated on
1 min read

75-வது சுதந்திர தினத்தையொட்டி பல நாடுகளின் கட்டிடங்கள், சுற்றுலா இடங்கள் மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் இந்தயாவின் 75-வது சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

அமெரிக்க, இங்கிலாந்து, துபாய்,உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் 75 மதிப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் ஆகஸ்ட் 15 மாலை முதல் ஆகஸ்ட் 16 காலை வரை இந்திய மூவர்ணத்தின் வெளிச்சத்தில் பிரகாசிக்கின்றன.

அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம்
அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம்

அது மட்டுமல்ல உலகப் புகழ் பெற்ற நயாகராவின் அலைகள் கனாடாவில் உள்ள நீர்வீழ்ச்சியும் மூவர்ணத்தில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய கட்டிடங்களில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம், யுனைடேட் ஸ்டேட்ஸ் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடடம், துபாயில் உள்ள புர்ஜ் கலீபா, ரஷ்யாவின் பரிணாம கோபுரம் அபுதாபியில் உள்ள புகழ் பெற்ற அட்னோக் குழு கோபுரம், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்தின் பர்மிங்காமின் புகழ்பெற்ற நூலகக் கட்டிடம்.

இந்தியாவின் சுதந்திர வரலாற்றோடு தொடர்புடைய பெருமை தருணங்களை நினைவு கூறுவதே இதன் நோக்கம், வெளிநாடுகளில் வாழும் ஏரளாமான இந்தியர்கள் முழு ஆர்வத்துடன் அதில் சேர்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in