

இந்தியாவில் தொடர்ந்து 48 நாட்களாக தினசரி கரோனா தொற்று 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 38 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 38 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 493ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 673 ஆகக் அதிகரித்துள்ளது. கடந்த 48 நாட்களாக கரோனாவில் தினசரி பாதிக்கப்படுவோர் 50ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 2ஆயிரத்து 446 பேர் அதிகரித்துள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 13 லட்சத்து 38ஆயிரத்து 88 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர் சதவீதம் 97.45 ஆக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 478 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 30 ஆயிரத்து 732ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 49 கோடியே 17 லட்சத்து 577 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மட்டும் 22 லட்சத்து 29ஆயிரத்து 798 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 53.61 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.