

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றவுள்ளார்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று (2021 ஆகஸ்ட் 14) உரையாற்றவுள்ளார்.
அனைத்து அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளில் மாலை 7 மணி முதல் முதலில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் அவரது உரை ஒலி, ஒளிபரப்பப்படும்.
இந்தி மற்றும் ஆங்கில ஒளிபரப்பை தொடர்ந்து, தூர்தர்ஷனின் பிராந்திய மொழி அலைவரிசைகளில் அந்தந்த மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாகும். பிராந்திய மொழி உரையை தனது பிராந்திய அலைவரிசைகளில் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலி ஒலிபரப்பும்.