முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் அனைத்து சோதனைகளிலும் வெற்றி

முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் அனைத்து சோதனைகளிலும் வெற்றி
Updated on
1 min read

உள் நாட்டில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த், அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்று தயார் நிலையில் உள்ளது. இது விரைவில் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து இத்துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 5 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படை யில் புதிதாக சேர்க்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் துறைமுகத்தில் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டது.

கடந்த 5 மாதங்களாக ஆழ்கடல் சோதனை, ஆயுத சோதனை உட்பட பல்வேறு நிலைகளில் சோதித்துப் பார்த்ததில் அனைத்திலும் வெற்றி பெற்றது. தயார் நிலையில் உள்ள இந்தக் கப்பல் எந்த நேரமும் கடற் படையில் சேர்க்கப்படும். இது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

இந்த கப்பலில் 700 கி.மீ. தூரத்துக்கு மேல் பாய்ந்து சென்று தாக்கும் கே 15 ரக ஏவுகணை மற்றும் 3,500 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் கே 4 ஏவுகணை ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in