

ரயில் நிலைய போர்ட்டர்கள் இனி ‘கூலி’ என்ற பெயரில் அழைக்கப்பட மாட்டார்கள் என்று ரயில்வே பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
போர்ட்டர்களை கூலி என்று அழைக்கும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்தில் உருவானது. போர்ட்டர்கள் இனி ‘சகாயக்’ அல்லது ‘ஹெல்ப்பர்’ என்று அழைப்படுவார்கள். இவர்களின் செந்நிற சீருடையை மாற்றவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட் டுள்ளது.
போர்ட்டர்களுக்கு மென் திறன் பயிற்சி அளிக்கவும், விமான நிலையங்களில் ‘ட்ராலி’ தள்ளுபவர் களுக்கு இணையான சலுகை களை போர்ட்டர்களுக்கு அளிக்கவும் ரயில்வே திட்டமிட் டுள்ளது.