Last Updated : 26 Feb, 2016 10:05 AM

 

Published : 26 Feb 2016 10:05 AM
Last Updated : 26 Feb 2016 10:05 AM

விபத்தில்லா ரயில் போக்குவரத்து, ரயில்களின் சராசரி வேகம் அதிகரிப்பு: ரயில்வே துறையின் முக்கிய 7 குறிக்கோள்கள்

விபத்தில்லா ரயில் போக்கு வரத்து, ரயில்களின் சராசரி வேகம் அதிகரிப்பு உள்பட ரயில்வே துறை யின் 7 குறிக்கோள்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது:

ரயில்வே துறை பல்வேறு நிலைகளிலும் திறம்பட செயல் படும் வகையில் மாற்றி அமைக்கப் பட வேண்டியது அவசியம். இதற் காக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் ஏழு குறிக்கோள்கள் திட்டமிடப்பட் டுள்ளன.

இதில் ஒன்றாக ‘பூஜ்ஜிய விபத்து’ என்ற பெயரில் விபத் தில்லா ரயில் போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் 40 சதவீத ரயில் விபத்துகளுக்கு ஆளில்லா லெவல் கிராஸிங் முக்கிய காரணமாக உள்ளது. இதுவே ரயில் விபத்தில் ஏற்படும் 90 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணமாக கருதுகிறோம். எனவே நாடு முழுவதும் அகல ரயில் பாதைகளில் வரும் 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் ஆளில்லா ரயில் கேட்களை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதை தடுக்க விபத்து தடுப்பு தொழில்நுட்பமும் ஏற்படுத்தப்படும்.

விபத்தில்லா பயணங்களுக்கு நாம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. இந்த நிலையை விரைந்து மாற்ற ஜப்பான் மற்றும் கொரியாவின் தொழில்நுட்ப உதவியை நாட உள்ளோம்.

‘25 டன்’ என்ற குறிக்கோளின் கீழ் 25 டன் எடையை தாங்கிச் செல்லும் வகையில் சரக்கு ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. 2016-17-ம் ஆண்டில் 10 முதல் 20 சதவீத சரக்குப் போக்குவரத்தை இந்த வகை பெட்டிகள் மூலம் கையாள முயற்சி மேற்கொள்ளப்படும். இதை 2019-20-ம் ஆண்டில் 70 சதவீதமாக அதிகரிக்க முயற்சிக்கப்படும்.

PACE (Procurement and Consumption Efficiency) என்ற குறிக்கோளின் கீழ் உலக அளவில் பயன்பாட்டில் உள்ள சிறந்த கொள்முதல் நடைமுறை களை பயன்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. இதன்மூலம் வரும் நிதி யாண்டில் ரூ. 1,500 கோடிக்கு மேல் சேமிக்கப்படும். மேலும் பழைய பொருட்களை அடையாளம் காண வும் விற்பனை செய்யவும் புதிய வழிமுறைகள் கையாளப்படும்.

அடுத்து ‘ரஃப்தார்’ என்ற குறிக்கோளின் கீழ் சரக்கு ரயில்களின் வேகம் 2 மடங்கு அதிகரிக்கப்படும். மெயில் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் விரைவு ரயில்களின் வேகம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 கி.மீ. வரை அதிகரிக்கப்படும்.

‘மிஷன் 100’ என்ற குறிக் கோளின் கீழ் ரயில் போக்கு வரத்தை முறைப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து முடங்க ரயில் நிலையங்களில் அமைந்துள்ள தனிப்பாதை மற்றும் தனியார்களுக்கான சரக்குமுனைய பற்றாக்குறை 85 சதவீதம் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய வரும் இரு ஆண்டுகளில் கூடுதலாக 100 தனிப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முற்றிலும் சரக்கு போக்குவரத் துக்கான 2 ரயில்பாதைகள் 2019-ம் ஆண்டுக்குள் செயல் பாட்டுக்கு வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x