மருந்து ‘ஓவர்டோஸ்’ ஆனதால் 2 மாத குழந்தை பலி

மருந்து ‘ஓவர்டோஸ்’ ஆனதால் 2 மாத குழந்தை பலி
Updated on
1 min read

கர்நாடகத்தில் 2 மாத‌ குழந்தைக்கு கொடுத்த மருந்து “ஓவர்டோஸ்” ஆனதால் உயிரிழந்தது. பிரேத பரிசோ தனைக்காக‌ வைக்கப்பட்டிருந்த இடத்தில் குழந்தையின் முகத்தை எலி குதறியுள்ளது. இந்த சம்ப வம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள டாக்டர் அம்பேத் கர் நகரை சேர்ந்தவர் முனிராஜு.கூலித்தொழிலாளியான இவரது 2 மாத பெண் குழந்தைக்கு கடந்த சனிக் கிழமை சுவாச பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்த‌து.

குழந்தையின் உடலைப்பெற்ற உற வினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இடது கையில் ஊசி போட்டதற்காக அடையாளம் தெரிந்தது.அங்கு ஏற்பட்ட லேசான காயத்தால் ரத்த கசிவும் ஏற்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குழந்தை எப்படி இறந்தது என்பதை அறிய‌ பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தை யின் உடலை ஹாசன் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு திங்கள்கிழமை உட் படுத்தினர். பிரேத பரிசோதனை முடிந்து செவ்வாய்கிழமை குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.குழந்தையின் மரணத்திற்கு ‘ஓவர் டோஸ்' மருந்து வழங்கப்பட்டதும், உடலுக்கு ஒவ்வாத ஊசியை போட்டதும் தான் காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிந்த குழந்தையின் முகத்தை பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனையில் பி ணவறையில் வைத்திருந்தபோது எலிகள் குழந்தையின் முகத்தைக் கடித்துக் குதறியுள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையின் தவறான சிகிச்சை குறித்தும், பிண வறையில் நேர்ந்த அலட்சியம் குறித்தும் ஹாசன் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனை சட்டம் 304-ம் பிரிவின்கீழ்,வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in