12-ம் வகுப்பு வரை மதிய உணவுத்திட்டம்: வல்லுநர்கள் குழு ஆலோசனை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பள்ளியில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதை 12-ம் வகுப்பு வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உணவுக்கான உரிமை குறித்து நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சிந்தனை முன்வைக்கப்பட்டது.

உணவு மற்றும் சரிவிகித உணவுக்கான உரிமையை உறுதி செய்யும் கொள்ளைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உறுப்பினர் ராஜீவ் ஜெயின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உறுப்பினர் ராஜீவ் ஜெயின் பேசுகையில் “ சர்வதேச அளவில் கூறப்பட்டுள்ள மனித உரிமைகள், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளின் முக்கியமான பகுதி உணவுக்கான உரிமையாகும்” என் தெரிவித்தார்.

உணவு மற்றும் பொதுவிநியோகத்துறையின் செயலாளர் சுதான்சு பாண்டே பேசுகையில் “ உணவுப் பகிர்வுக்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்தான் உண்மையில் சவாலானது. இந்த தொழில்நுட்பங்கள் மூலம் போலியான ரேஷன்கார்டுகளை எளிதாக அடையாளம் காணமுடியும் வகையில் முடிவுகள் கிடைத்துள்ளன” எனத் தெரிவித்தார்

தாய்பால் ஊட்டுதலை ஊக்கப்படுத்துவது, பாக்கெட்டுகளை அடைத்து விற்கப்படும் திண்பண்டங்களில் அதிக சர்க்கரை, உப்பின் அளவைக் கட்டுப்படுத்துதல், பொதுவிநியோகத்திட்டம், பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா, உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றை நீட்டிக்க வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைப்பதால் பல்வேறு குளறுபடிகள் தடுக்கப்பட்டாலும், தகவல் தொடர்பு இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுவிநியோகத்தின் மூலம் கிடைக்கும் பொருட்களில் தடை ஏற்படக்கூடாது, பயனாளிகளுக்கு பொருட்கள் சேர வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

பொதுவிநியோகத்திட்டத்தில் பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பரவலாக்க வேண்டும், தற்போது மதிய உணவுத் திட்டம் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரைதான் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை 12-ம் வகுப்பு வரை வழங்கவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in