ராகுல் காந்தி காஷ்மீர் பயணம்: கீர்பவானி கோயிலில் வழிபாடு

ராகுல் காந்தி காஷ்மீர் பயணம்: கீர்பவானி கோயிலில் வழிபாடு
Updated on
1 min read

காஷ்மீருக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று கீர்பவானி கோயிலில் வழிபாடு நடத்தியதுடன், ஹஸ்ரத்பல் தர்காவிலும் பிரார்த்தனை செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகள் திருமணம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ராகுல் முதல்முறையாக வந்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் இன்று அவர் வழிபாடு நடத்தினார்.

அவருடன் கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பல் தர்காவிலும் அவர் பிரார்த்தனை செய்தார்.

காஷ்மீரில் இரண்டு நாள் பயணத்தின்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை ராகுல் காந்தி திறந்து வைக்கிறார். தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in