அதிகாரி மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை: சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படம்

ஐடிபிபி படையில் அதிகாரியாக சேர்ந்துள்ள மகள் தீக் ஷாவுக்கு சல்யூட் அடிக்கும் ஐடிபிபி இன்ஸ்பெக்டர் கமலேஷ் குமார்.
ஐடிபிபி படையில் அதிகாரியாக சேர்ந்துள்ள மகள் தீக் ஷாவுக்கு சல்யூட் அடிக்கும் ஐடிபிபி இன்ஸ்பெக்டர் கமலேஷ் குமார்.
Updated on
1 min read

அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கும் மகளுக்கு இந்தோ - திபெத் போலீஸ் படை (ஐடிபிபி) இன்ஸ்பெக்டர் சல்யூட் அடிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், இந்தோ திபெத் போலீஸ் படை, என்எஸ்ஜி, எஸ்எஸ்பி ஆகிய 5 மத்திய காவல் படைகள் உள்ளன. இதில், இந்தோ - திபெத் போலீஸ் படையை தவிர மற்ற படைகளில் பெண்கள் நியமனம் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங் கிவிட்டது. தற்போது ஐடிபிபி படையிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் போர் பணிகளில் அவர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், முதன்முறையாக இந்தோ-திபெத் போலீஸ் படையில் உதவி கமாண்டட் பணியிடங்களில் பிரக்ரிதி, தீக் ஷா ஆகிய 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தீக் ஷாவுக்கு அவரது தந்தையும், ஐடிபிபி இன்ஸ்பெக்டருமான கமலேஷ்குமார் பெருமை பொங்க சல்யூட் அடித்துள்ளார். எனது மகளுக்கு பெருமையுடன் நான் வைக்கும் சல்யூட்என்ற கேப்ஷனுடன் அவர் இந்தபுகைப்படத்தை சமூக வலைத்தளங் களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தீக் ஷா கூறும்போது, “எனக்கு எனது தந்தைதான் முன் மாதிரி. அவர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவரால்தான் என்னால் இதை சாதிக்க முடிந்தது” என்றார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in