

திருப்பதி திருமலை ஏழு மலையான் கோயிலில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை கருட சேவை நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும்பவுர்ணமி அன்றும், மற்றும் பிரம்மோற்சவம், ரத சப்தமி அன்றும் கருட சேவை நடைபெறுவது வழக்கம். இதேபோன்று நாக பஞ்சமிக்கும் கருட சேவை நடைபெறுவது ஐதீகம்.
இந்த ஆகஸ்ட் மாதம் 13-ம்தேதி நாகபஞ்சமி திருமலையில் நடத்தப்படுகிறது. இதனையொட்டி அன்றிரவு 7 மணிக்கு உற்சவ மூர்த்தியான மலையப்பர் கருட வாகனத்தில் 4 மாட வீதி களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
இதேபோன்று வரும் 22-ம்தேதி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, அன்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை 4 மாட வீதிகளில் கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பரின் வீதி உலா நடைபெற உள்ளது. ஆதலால் இம்மாதம் 2 முறை கருட வாகன சேவை நடத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.