லடாக்கில் மத்திய பல்கலை. அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

லடாக்கில் மத்திய பல்கலை. அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
Updated on
1 min read

லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா 2021 மக்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. மாநிலங்களவையில் நேற்று இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘லடாக்கில் இப்போது மத்திய பல்கலைக்கழகம் இல்லை. லடாக், லே பகுதிகளில் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே, லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’’ என்றார். பின்னர், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது. இதன் மூலம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in