

அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய முதல்வராக கலிகோ புல் பதவி யேற்றதை ஆராய உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கலிகோ புல் திடீரென பதவியேற்ற தற்கு எதிராக முன்னாள் முதல்வர் நபம் துகி, முன்னாள் சபாநாயகர் நபம் ரெபியா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தனர். இந்த மனுவை நீதிபதி ஜகத் சிங் கேகர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கள் பாலி நாரிமன், கபில் சிபல் ஆகியோர் நேற்று கூறும் போது, “கலிகோ புல் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டது குறித்து ஆராய உச்ச நீதி மன்றம் ஒப்புக்கொண்டது. நீதிபதி ஜே.எஸ். கேகர் தலைமையிலான அமர்வு இதை விசாரிக்கும்” என்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஜனவரி 25-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த வெள்ளிக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்ட சில மணி நேரத்தில் கலிகோ புல் புதிய முதல்வராக பதவியேற்றார். மறுநாள் ஆளுநர் ஜே.பி. ராஜ்கோவாவை கலிகோ புல் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.