திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக ஒய்.வி.சுப்பாரெட்டி மீண்டும் நியமனம்: உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி

திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக ஒய்.வி.சுப்பாரெட்டி மீண்டும் நியமனம்: உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி
Updated on
1 min read

திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் ஒய்.வி. சுப்பாரெட்டியை ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது. உறுப்பினர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

வாழ்க்கையில் ஒரு முறை யாவது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ பதவி வகிக்க வேண்டும் என்பது பலரின் விருப் பமாக உள்ளது. ஆதலால், இப்பத விக்கு கடும் போட்டா போட்டி நிலவுவது வழக்கம்.

ஒவ்வொரு முறையும் அறங் காவலர் குழுவின் இரண்டாண்டு பதவிக் காலம் முடிந்த பின்னர், இப்பதவிகளை வகிக்க பலரும் முயற்சிப்பார்கள். ஆந்திர அரசிய லில் மாற்றம் ஏற்பட்டு, ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான பின்னர், கடந்த முறை, தனது உறவினரான ஒய்.வி.சுப்பாரெட்டியை அறங்காவலர் குழு தலைவராக நியமித்தார்.

இவரது 2 ஆண்டு பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இவருக்கு மாநிலங்களவை உறுப் பினர் பதவி வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் இவரையே திருமலை திருப்பதி தேவஸ்தான அறங் காவலர் குழு தலைவராக முதல்வர் நியமனம் செய்துள்ளார்.

கடந்த முறை, இவர் பதவி ஏற்று சுமார் 2 மாதங்கள் கழித்து தான் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில், ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த வர்கள் தலா 8 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேர் உட்பட 31 பேர் உறுப்பினர்களாக பதவி வகித்தனர்.

தற்போது இதை விட அதிக மானோர் உறுப்பினர் பதவிக்காக பலத்த சிபாரிசுடன் முதல்வரை நெருங்கியுள்ளனர். தவிர தமிழக, கர்நாடக அரசுகளும் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து பெயர்களை ஆந்திர அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளது.

இம்முறை வேலூர் மாவட் டத்தை சேர்ந்த, அதிக கடவுள் பக்தி உள்ள ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல, இம்முறையும் சேகர் ரெட்டி சிறப்பு உறுப்பினராக இடம்பெறுவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in