

இந்தோ - திபெத் போலீஸ் படையில் (ஐடிபிபி) போர் பணியில் முதன்முறையாக 2 பெண் அதிகாரிகள் நேற்று இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், இந்தோ திபெத் போலீஸ் படை, என்எஸ்ஜி, எஸ்எஸ்பி ஆகிய 5 மத்திய காவல் படைகள் உள்ளன. இதில், இந்தோ - திபெத் போலீஸ் படையை தவிர மற்ற படைகளில் பெண்கள் நியமனம் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்தோ திபெத் போலீஸ் படையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பெண்கள் நியமிக்கப்பட்டு வந்த போதிலும், போர் பணிகளில் அவர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், முதன்முறையாக இந்தோ திபெத் போலீஸ் படையில் உதவி கமாண்டட் பணியிடங்களில் பிரக்ரிதி, தீக் ஷா ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரக்ரிதி மின் பொறியாளராக நியமிக்கப்பட்டிருக் கிறார்.
பயிற்சி முடிவடைந்த நிலை யில், இவர்கள் இருவரும் முறைப்படி இந்தோ திபெத் காவல் படையில் நேற்று இணைந்தனர். உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து இவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.