

வருமான வரி செலுத்துபவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்ப்பதற்காக வருமான வரித் துறை 3 மின்னஞ்சல் முகவரிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
வரி செலுத்துபவர்களின் சுமை, நேர விரயம், முறைகேடுகளை தவிர்ப்பதற்காக வரிநடைமுறைகள் தொடர்பான விவகாரங்களை எளிமைப்படுத்தும் வகையில் நேரடி தலையீடு இல்லாத இணையவழி முறையை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியது. 2020 ஆகஸ்ட்டில் 74-வது சுதந்திர தினத்தை ஒட்டி இந்த வசதியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த வசதியானது கடந்த ஆண்டு செப்டம்பர் 25 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. வரி செலுத்துபவருக்கும் வரித் துறை அதிகாரிகளுக்கும் இடையில் எந்தவித நேரடி தொடர்பும் இல்லாமல் செய்வதே இந்தஇணையதளத்தின் நோக்கம்.இதன் மூலமாக வரி நடைமுறைகளை செயல்படுத்தும் போது லஞ்சம், ஊழல் முறை கேடுகளும் குறையும் என வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அதன் தொடர்ச்சியாக வரி செலுத்துபவர்களின் குறை களைத் தீர்க்க தனியாக மின் னஞ்சல் வசதியை வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. வரிதாரர்களின் நேரடி தலையீடு இல்லாத வரி மதிப்பீடு, அபராதம் மற்றும் மேல்முறையீடு உள்ளிட்ட மூன்று விவகாரங்களுக்கும் தனித்தனியான மின்னஞ் சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
வரிதாரர்கள் samadhan.faceless.assessment@incometax.gov.in; samadhan.faceless.penalty@incometax.gov.in; and samadhan.faceless.appeal@incometax.gov.in ஆகிய மூன்று மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தங்களின் குறைகளையும் புகார்களையும் தெரிவிக்கலாம்.