

திருப்பதி தேவஸ்தான அலுவ லகத்தில் நேற்று ‘டயல் யுவர் இ ஓ' எனப்படும் தொலை பேசி மூலம் பக்தர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி பக்தர்களின் குறைகளைக் கேட்ட பின்னர் கூறியதாவது:
சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணனின் பரிந்துரையின் பேரில் தினமும் குறைந்தபட்சம் 1,000 பக்தர்களையாவது இலவசதரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்ட பின்னர், மக்கள் நலனை கருதி இலவச தரிசனத்தை மீண்டும் தொடங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கேட்டுக்கொண்ட தற்கு இணங்க ரூபாய் 300 சிறப்புதரிசனத்துக்காக தினமும் 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அலிபிரி நடை வழிப்பாதையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால், இந்த தடத்தில் பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதி இல்லை. செப்டம்பர் மாதத்திற்குள் இப்பணிகள் முடிவடைந்த பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் இவ்வழியாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு ஜவஹர் ரெட்டி கூறினார்.