

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் போது, எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை சமாளிக்க ஆளும் பாஜக அரசு வியூகம் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத்தொட ரில் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை, சகிப்பின்மை, விலை வாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சமாளிக்க பாஜக பல்வேறு வியூ கங்களை வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் உறுதியுடன் இருப்பது, தீவிரவாதி ஹெட்லி அளித்த வாக்குமூலங்கள் மூலம் எதிர்க்கட்சிகளை மடக்குவது என பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் கடந்த 2004-ம் ஆண்டு இளம் பெண் இஷ்ரத் ஜஹான் என்பவர் போலி என் கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலை படையைச் சேர்ந்த தீவிரவாதி என மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார். அதை யும் கூட்டத் தொடரில் சுட்டிக்காட்ட பாஜக தயாராகி வருகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறும்போது, ‘‘ஜவஹர்லால் நேரு பல்கலை. விவ காரத்தில் தேசத்துக்கு எதிரானவர் கள் மீது நடவடிக்கை எடுத்ததில் மத்திய அரசு உறுதியாக உள்ளது’’ என்றனர்.
சமீபத்தில் சியாச்சினில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் நாட்டுப்பற்றை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கப் போவதாகவும் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ‘ஜன் ஸ்வாபி மான் அபியான்’ என்ற மூன்று நாள் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக இன்று தொடங்கவுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் தேசத் துக்கு எதிராக செயல்படுபவர்களை தோலுரித்து, மக்கள் மத்தியில் ஆதரவு பெறவும் பாஜக திட்ட மிட்டுள்ளது.