

அகில இந்திய அளவில் நடை பெற்று வரும் புரோ கபடி போட்டி களில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி களுக்கு அடுத்தபடியாக ரசிகர்க ளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள புரோ கபடி போட்டிகள் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கின. வரும் மார்ச் 6-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் 8 குழுக்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த போட்டிகளில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதன் அடிப்படையில் போலீஸார் உத்துகூரு கிராமத்தில் உள்ள ஒரு கடையில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சூதாட்டத்தில் ஈடு பட்டதாக 17 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10,000 பணம் மற்றும் செல்போன்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.