‘‘இந்தியா பெருமை கொள்கிறது’’- போராடி தோற்ற பெண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி புகழாரம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

‘‘இந்தியா பெருமை கொள்கிறது. இந்த பெண்கள் ஹாக்கி அணியால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.

ஒரு கட்டத்தில் 0-2 என்று பிரிட்டனிடம் பின் தங்கி பிறகு 3-2 என்று முன்னிலை பெற்றிருந்தது.இங்கிலாந்து முதல் கோல் இந்திய அணியின் சேம்சைடு கோலாக மாறியதும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து இருந்ததால் கூடுதலாக கோல் அடித்து முன்னிலை பெற தொடக்கம் முதலே போராடின. இங்கிலாந்து அணி மூன்றாவது நிமிடத்தில் தங்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோல் ஆக மாற்றியது.

இதனால், இங்கிலாந்து 4-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இறுதி நிமிடங்களில் இங்கிலாந்து அணி தடுப்பாட்டம் ஆடியது. இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் நாம் ஒரு பதக்கத்தை இழந்தோம். ஆனால் நமது ஹாக்கி அணி புதிய இந்தியாவின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அங்கு நாம் டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிய எல்லைகளை தொட்டுள்ளோம்.

மிக முக்கியமாக, #டோக்கியோ 2020 -இல் அவர்கள் பெற்ற வெற்றி இந்தியாவின் இளம் மகள்களுக்கு ஹாக்கியை எடுத்துச்செல்லவும், அதில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும். இது இந்திய அணிக்கு பெருமையே.

#டோக்கியோ 2020 இல் நமது மகளிர் ஹாக்கி அணியின் திறமையான ஆட்டத்தையும், செயல்திறனையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். அவர்கள் முழுமனதுடன் விளையாடி தங்களால் முடிந்த அளவுக்கு திறனை வெளிப்படுத்தினர்.

அணியின் ஒவ்வொரு வீரானங்கனையும் தைரியம், திறமை மற்றும் நெகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த சிறந்த அணியால் இந்தியா பெருமை கொள்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in