

உத்தரபிரதேசத்தில் ரூ.687 கோடி மதிப்புள்ள போதையை ஏற்படுத்தும் மருந்துப் பொருட் களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்ட துடிபரி பகுதியில் போதையை ஏற்படுத் தும் மருந்துப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீஸாரும் சகஸ்ர சீமா பால் எல்லைப் படையினரும் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரமேஷ் குமார் குப்தா என்பவரின் வீடு மற்றும் குடோனில் இருந்து போதை ஊசிகள், சிரப்புகள், கேப்சூல்கள், மாத்திரைகள் மற்றும் போலி லேபிள்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.687 கோடி ரூபாய் என்று சகஸ்ர சீமா பால் கமாண்டர் மனோஜ் சிங் தெரிவித்தார். இவற்றில் சில மருந்துகள் விற்கப்பட்டதாகவும் சில மருந்துகள் நேபாளத்துக்கு கடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ரமேஷ் குமார் குப்தாவை போலீஸார் கைது செய்தனர். தப்பி சென்ற மற்றொரு குற்றவாளி கோவிந்த் குப்தா என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக மகராஜ்கஞ்ச் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்தார்.