வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை உயர்த்த ரூ.92,174 கோடியில் 45 திட்டங்கள்

வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை உயர்த்த ரூ.92,174 கோடியில் 45 திட்டங்கள்
Updated on
1 min read

ரயில்வே வேலைவாய்ப்புகளை பெருக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலும் 45 புதிய திட்டங்கள் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

# இந்த 2016-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் மாற்றத்துக்கு வழிவகுப்பதாக இருக்கும். வேலைவாய்ப்புகள் உள்ள, பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும் அமைப்பாக ரயில்வே உருவாக்கப்படும். அதற்காக ரூ.92,174 கோடி மதிப்பில் 45 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

# ரயில் பயணிகளுக்கு தரமான சேவை வழங்கும் இலக்கை அடைய, ரயில்வே துறையை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு ரூ.8.5 கோடியை அரசு செலவிடும்.

# ரயில் நிலையங்களில் கூடுதலாக 1,780 டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்படும்.

# இந்த ஆண்டு 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதி கொண்டுவரப்படும். அடுத்த ஆண்டு 400 ரயில் நிலையங்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

# 2,500 கி.மீ. தூர அகல பாதை அமைக்கும் பணி இந்த ஆண்டு முடிக்கப்படும். இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in